தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க கோரிக்கை
2 Jan 2026, 3:33 pm
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, ஜன.2- கிராம ஊராட்சிகளில் குப்பைகளை கையாள பணியா ளர்களுக்கு தரமான வாகனம் மற்றும் உபகரணங்களை ஊராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், மடத்துக்குளம் தாலுகாவில் 11 ஊராட்சிகள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமப்புற ஊராட்சிகள் நகரங்க ளுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வகையில், புதிய குடியி ருப்புகள் அதிகமாகி வருகின்றன. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஊராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள் ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் புதிய குடியிருப்புக ளால் தினசரி அதிக அளவில் குப்பை சேர்கிறது. இந்த குப் பையை சாலையோரங்களில் வீசி செல்வதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை போல் வாகனங்கள் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும். அப்போது தான் ஊராட்சி பகுதிகளில் இனி வரும் காலங்களில் குப்பையை அகற்ற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் சிலர் தெரிவிக்கை யில், கிராமங்களில் குப்பையை வாங்க தரப்படும் வண்டிகள் தரம் இல்லாமல் உள்ளது. இதனால் குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் தள்ள முடிவது இல்லை. மேலும் எங்க ளுக்கு பாதுகாப்பு கருவிகள் பெயருக்கு மட்டும் தருகின்ற னர். சாலை ஓரங்களில் இருக்கும் குப்பையை எடுக்க உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது இல்லை. மேலும் புதிய ஊழியர்களை நியமனம் செய்வதும் இல்லை. முழு வேலையும் எங்களையே செய்ய சொல்கின்றனர் என வேத னையுடன் தெரிவித்தனர். பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை எடுக்க பின்பற்றப்படும் நடைமுறையை இனி வரும் காலங்க ளில் ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.</p>
