தனிநபர் கடன்கள் நிபந்தனை இன்றி வழங்க கோரிக்கை
22 Dec 2025, 4:47 am
<p>திருவண்ணாமலை, டிச.22- சிறுபான்மையின பெண்களுக்கான தனிநபர் கடன்களை, பிணயம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இன்றி வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மை நல ஆணையத்தின் சார்பாக திங்க ளன்று (டிச. 22) வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடன் மேளா நடத்தப்பட்டது. சிறுபான்மை நல ஆணைய அலுவலர்கள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் கா. யாசர் அராபத், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர் ஜீனத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையின பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவிலான தனிநபர் கடன்களை பிணையம் உள்ளிட்ட நிபந்தனைகள் இன்றி வழங்க வேண்டும், உலமா பட்டம் முடித்த பெண்களுக்கு அதற்கான சான்றும், நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிறுபான்மையின மக்கள் நலக்குழு நிர்வாகிகள் உரையாற்றினர்.</p>
