வீடற்ற மக்களுக்கு குடியிருப்புகள் வழங்ககோரிக்கை
21 Jan 2026, 3:58 pm
<p><strong>வீடற்ற மக்களுக்கு குடியிருப்புகள் வழங்ககோரிக்கை </strong></p>
<p>சென்னை மாநகராட்சி துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 55 வது வட்டம் ஏழு கிணறு பகுதியில் பல பத்தாண்டுகளாக தெருவோரத்தில் வசித்து வரும் வீடற்ற மக்களுக்கு குடியிருப்பு வழங்க கோரி மாவட்ட வருவாய் அலுவலர் நா.காளிதாசிடம் புதனன்று (ஜன.21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், துறைமுக பகுதிச் செயலாளர் ஆர்.குமார், கிளைச் செயலாளர் ஏ.மைக்கேல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
