ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்க கோரிக்கை
17 Dec 2025, 4:11 pm
<p><strong>ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்க கோரிக்கை </strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.17 - உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பு.மாம்பாக்கம் கிராமம் இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கின்ற பகுதியில் நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் அரிசி,சர்க்கரை,பருப்பு, எண்ணை போன்ற ரேசன் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என பகுதி மக்கள் கூறினர். மாதத்தில் ஒரு முறை, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் கடையை திறந்து பொருட்கள் வழங்குகின்றனர். கடந்த 8 மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு சமையல் எண்ணெய் பாக்கெட் வழங்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. முதியோர்களுக்கு (ஓ.ஏ.பி) இலவச துணிமணிகளும் கேட்டாலும் கொடுப்பதில்லை. நியாயவிலைக் கடை எப்போது திறப்பார்கள் பொருள்கள் எப்போது வழங்குவார்கள் என்று இப்பகுதி மக்கள் காத்திருப்பதோடு அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்பது பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
