மயான சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை திரு
23 Dec 2025, 4:05 pm
<p><strong>மயான சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை திரு</strong></p>
<p> திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள ஓசூர், மருதாடு, தேசூர் உள்ளிட்ட பகுதிகளில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி, மின்விளக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் செவ்வாயன்று (டிச.23) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் நல குழு நிர்வாகிகள் யாசர் அராபத், அப்துல் காதர், கல்லாகுத்து ஜமாத் நிர்வாகிகள் உசேன், ஜாபர் அலி, காதர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
