முந்தய பக்கம்

நீர்நிலை தொட்டிகளை திறக்கக் கோரிக்கை

24 Feb 2026, 3:55 pm
நீர்நிலை தொட்டிகளை திறக்கக் கோரிக்கை
<p><strong>நீர்நிலை தொட்டிகளை திறக்கக் கோரிக்கை</strong></p> <p>கோவை, பிப்.24- அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி பகுதியில் கட்டி &nbsp;முடிக்கப்பட்டு 5 ஆண்டுக ளாக பயன்பாட்டுக்கு வராத நீர்த்தேக்க தொட்டிகளை உடனடியாக திறக்கக்கோரி, &nbsp;எஸ்.எஸ்.குளம் வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலரிடம் மார்க் சிஸ்ட் கட்சியினர் மனு அளித் தனர். கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி யில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு கீழ்நிலை மற்றும் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப் பட்டன. கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு &nbsp;வரப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தில் கடும் குளறுபடிகள் நிலவி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை யில், அப்பகுதி மக்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி யினர் கையெழுத்து இயக்கம் நடத்தி பிடி ஓ-விடம் செவ்வாயன்று மனு அளித்தனர். இதில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு &nbsp;காணும் வகையில் இந்த தொட்டிகளை &nbsp;உடனே பயன்பாடிற்கு கொண்டு வர வேண் டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இயக்கத்தில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். கனகராஜ், கிழக்கு இடைக்குழு செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.பாரதி, இடைக்குழு உறுப்பினர்கள் ஆர்.முருகேஷ், ராபர்ட் மணி, உமாநாத், கிளைச் செயலாளர் பி.ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram