தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊக்கத் தொகையாக பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க கோரிக்கை

12 Dec 2025, 2:40 pm
அரசு ஊக்கத் தொகையாக  பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க கோரிக்கை
<p><strong>அரசு ஊக்கத் தொகையாக &nbsp;பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க கோரிக்கை</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.12- &nbsp;தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க 6 ஆவது மாவட்ட மாநாடு திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் வியாழனன்று நடைபெற்றது. &nbsp;மாநாட்டிற்கு சங்க மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சேகர், வரதராஜன், சீனிவாசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, மாநில பொதுச்செயலாளர் பெருமாள், மாவட்டச் செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம், சிபிஎம் வட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். &nbsp;மாநாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45-ம், எருமை பாலுக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக பால் ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே. சேகர், செயலாளராக பி. ராமநாதன், பொருளாளராக ஜெ. ஜெகதீசன், துணைத் தலைவர்களாக தங்கராஜ், குமார், இணைச் செயலாளர்களாக திருநாவுக்கரசு, ஜான்பிரிட்டோ உள்பட 25 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டப் பொருளாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.