தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

15 Mar 2026, 4:11 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் துறையையும் சேர்க்கக் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 15– 20 சதவிகித வர்த்தக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில், ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் துறையையும் சேர்க்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்  அர.சக்கரபாணி மற்றும் தொழில், முதலீட்டு  மேம்பாடு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு அவர் ஞாயி றன்று மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,  ஆடை ஏற்றுமதி தொழில்துறைக்கு இடைய றாத எல்பிஜி விநியோகம் அவசியம். கடின மான காலகட்டங்களிலும் ஆடை துறைக்கு  தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக அரசு, தற்போது நிலவி வரும் இஸ்ரேல் –  ஈரான் மோதல் காரணமாக எல்பிஜி விநி யோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு, உற் பத்தி செயல்பாடுகளில் அதை முக்கியமாக பயன்படுத்தும் தொழில் துறைகளை கடுமை யாக பாதித்துள்ளன. ஆடை உற்பத்தித் துறை யில் எல்பிஜி ஒரு முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக டையிங்,  வாஷிங், காம்பாக்டிங் மற்றும் ஃபினிஷிங் போன்ற செயல் முறைகளில் எல்பிஜி இன்றி யமையாததாக உள்ளது. இவை அனைத்தும்  ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையின் முக்கிய  அடித்தளமாக விளங்குகின்றன. ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு, ஒவ் வொரு மாநிலத்தின் தேவைகளைப் பொருத்து வர்த்தக மற்றும் தொழில்துறை எல்பிஜி சிலிண்டர்களின் ஒதுக்கீட்டை நிர்ண யிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. தற் போதைய நிலவரப்படி, வர்த்தக பயன் பாட்டிற்காக 20% சிலிண்டர் ஒதுக்கீடு அனு மதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த  சூழ்நிலையில், குறைந்தபட்சமாக அவசிய மான அளவு எல்பிஜி கிடைக்கும்படி, அந்த  20% வர்த்தக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில்  ஆடை ஏற்றுமதி தொழில் துறையையும் சேர்த்து கொள்ள பரிசீலிக்குமாறு தமிழக அர சிடம் ஏஇபிசி கேட்டுக் கொண்டுள்ளது. தற் போதைய பற்றாக்குறை நீடித்தால், பல  நிறுவனங்கள் தற்காலிகமாக செயல்பாடு களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படக் கூடும். இதன் விளைவாக ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உற்பத்தி முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே,  இந்த சவாலான காலகட்டத்தில் தொழில் துறை செயல்பாடுகள் இடையூறு இல்லாமல்  நடைபெறுவதற்காக, 20% வர்த்தக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில் ஆடை ஏற்றுமதி தொழில் துறையையும் உடனடியாகச் சேர்த்து பரிசீலிக்குமாறு ஏ.சக்திவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகர்கள் பாதிக்கப்படக்கூடாது!

நாமக்கல், மார்ச் 15- நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் பாதிக்காத வண்ணம் தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர்  ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வந்துள்ளதால், ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல் வதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப் படும். வியாபாரிகள் தங்களின் தொழில்  சம்பந்தமான பணம் மற்றும் சரக்குகளை  கையாளும்போது தக்க ஆவணங்களு டனும், வசூலுக்கு செல்லும் வியாபாரிகள் மற் றும் வினியோகஸ்தர்கள் பணத்தை வாங்கும்  போது முறையான ரசீது வழங்கி அதற் கான நகலை உடன் வைத்துக்கொள்வதும் அவசியம். தேர்தல் விதிமுறைகளின்படி ரூ.50  ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு  செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக ரொக்கம் கொண்டு செல் வோர் முறையான ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்களின்றி கொண்டு செல்லும் ரொக்கம் தேர்தல் கண் காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய் யப்படும் என்பதை கவனத்தில் கொண்டு  வணிகர்கள் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனினும், சில நடை முறை சிக்கலால் பெரும்பாலும் பணத்தை பறிகொடுப்பதும், பாதிக்கப்படுவதும் சிறு வியாபாரிகளும் விவசாய பெருமக்களும் தான் என்பதை தேர்தல் ஆணையம் கருத் தில் கொண்டு, வியாபாரிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ரொக்கத்தின் வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தி தர வேண் டும். மக்களுக்கு அனைத்து அத்தியாவ சியப் பொருட்களும் தடையின்றி கிடைக்க  வழி செய்யும் வியாபாரிகளின் இன்னல்களை  போக்கும் விதத்தில், தேர்தல் ஆணையம்  வியாபாரிகளுக்கு இம்மாதிரியான கால கட்டங்களில் தகுந்த வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் ரம்ஜான்: களைகட்டிய ஆட்டுச்சந்தை

கோவை, மார்ச் 14- ரம்ஜான் பண்டிகை நெருங்கியுள்ளதால், அன்னூரில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் விவசா யத்துடன் சேர்ந்து ஆடு உள்ளிட்ட கால்நடை கள் வளர்ப்பையும் செய்து வருகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு சில  தினங்களே உள்ள நிலையில், சனியன்று அன் னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே  ஆடுகள் விற்பனை களைகட்டியது. வியா பாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு களை வாங்கிச் சென்றனர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரளம் மாநிலங்களில் இருந் தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரி கள் வந்திருந்தனர். குட்டிகள் ஆயிரம் ரூபாயி லிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், எடை  அதிகமுள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல்  அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை யிலும் விற்பனை செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.