தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்புயர்தரிகள் கோரிக்கைகளை பிரசாரத்தில் முன்வைக்க கோரிக்கை

8 Apr 2026, 5:30 am
ஒப்புயர்தரிகள் கோரிக்கைகளை பிரசாரத்தில் முன்வைக்க கோரிக்கை

ஒப்புயர்தரிகள் கோரிக்கைகளை பிரசாரத்தில் முன்வைக்க கோரிக்கை

கடலூர், ஏப். 7- கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுபெற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ந. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் எஸ். கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநிலத் துணைத் தலைவர் பி. ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஓய்வுபெற்றவர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 70 வயது நிறைவடைந்த ஓய்வுபெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், 15 ஆண்டுகளுக்குக் குறைவாக வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தவுடன் இவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் ந. பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் சி. ஆறுமுகம் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.