நொய்யல் ஆற்றின் மழை, வெள்ள கால நீரை பல்லடம் வட்டார குட்டைகளுக்கு நிரப்பக் கோரிக்கை
20 Dec 2025, 3:38 pm
<p>திருப்பூர், டிச. 20 – பல்லடம் தாலுகாவில் மேற்கு, தெற்கு பகுதிகளில் வறட்சியைப் போக்கிட நொய்யல் ஆற்றில் மழை, வெள்ளக் கால நீரை குளம், குட்டைகளுக்கு நீரேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் அருகே லட்சுமி மில் ஏபிசி சங்கீதா மகாலில் சனியன்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் வை. பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியத்தலைவர் சுப்ரமணியம் வர வேற்றார். மாவட்டத் தலைவர் மது சூதனன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பரமசி வம், கோவை மாவட்ட விவசாயி கள் சங்கச் செயலாளர் வி.ஆர்.பழ னிசாமி, செம்மிபாளையம் முன் னாள் ஊராட்சி தலைவர்கள் பொன் னுசாமி, திருமூர்த்தி மற்றும் பழ. சக்திவேல், சுப்பையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருப் பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா வில் கோடாங்கிபாளையம், பரு வாய், செம்மிபாளையம், சுக்கம் பாளையம், க.அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேவுண்டம்பாளை யம், கே.கிருஷ்ணாபுரம், புளியம் பட்டி, பணிக்கம்பட்டி, அனுப்பட்டி, வடுகபாளையம் புதூர், சித்தம்ப லம், இச்சிப்பட்டி, பூமலூர் (தெற்கு பகுதி), கேத்தனூர் ஊராட்சிகளில் உள்ள மக்கள் விவசாயமும், கோழிப்பண்ணை, கறவை மாடு கள் வைத்து பால் கறவை மற்றும் விசைத்தறி தொழிலும் அடிப்படை யாகும். பல்லடம் தாலுகாவில் கிழக்குப் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நீரால் பாசனம் பெறுகிறது. ஆனால் மேற்கு, தெற்கு பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. சமீப காலமாக கடும் வறட்சியை சந்தித்து வருகி றது. போதிய மழையின்மையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுகீழாக சென்று விட்டது. நிலத்தடியின்கீழ் கிடைக்கும் நீரும் அதன் தன்மை யும் உவர்ப்பாக மாறி பயன்பாடற்ற தாகி விட்டது. எனவே தற்போதிருக் கும் விவசாயமும் கேள்விக்குறி யாகிவிட்டது. இந்தப் பகுதியில் விவசாயத்தை பாதுகாக்க, நிலத் தடி நீர்மட்டத்தை உயர்த்த, வறட்சியை போக்க, நொய்யலாற் றில் மழைக்காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொழியும் நீரால் ஏற்படும் வெள்ளப்பெருக் கின் போது வழிந்தோடி வரும் நீரைப் பயன்படுத்தி, சாமளாபுரம் அருகே நீரேற்று நிலையம் உரு வாக்கி மேற்கண்ட 15 ஊராட்சி பகுதி களில் உள்ள குளம் குட்டைக ளுக்கு நீர் நிரப்ப புதிய திட்டம் உரு வாக்கி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றில் வழியோர தொழிற்சாலைகள் மற்றும் உள் ளாட்சிகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், திடக் கழிவுகள் கொட் டப்படுவதை தடுக்கவும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பல்ல டம் வட்டாரத்தில் போதிய மழை யின்மையால் இந்தாண்டு கால் நடைகளுக்கு தீவனம் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே கால் நடைகளுக்கு வைக்கோல் உட் பட தீவனங்களை அரசு மானியத் தில் வழங்க வேண்டும். ஆனை மலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நிறைவாக மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் நிறை வுரை ஆற்றினார். இந்த மாநாட் டில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளா ளர் லோகநாதன் நன்றி தெரிவித் தார்.</p>
