காவலர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யக் கோரிக்கை
10 Dec 2025, 4:08 pm
<p><strong>காவலர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யக் கோரிக்கை</strong></p>
<p>நாமக்கல், டிச.10- கிராமப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டத்தால், போலீசாரின் துணையோடு ஊர் இளை ஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், காவலர் பற்றாக்கு றையை பூர்த்தி செய்ய சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள பூலாக்காடு பகுதி யில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுமார் 25 பவுன் நகை மற்றும் ரொக்கத் தொகை கொள்ளையடிக்கப்பட்ட சம் பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் நள்ளி ரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் அதிகமாக இருப் பதாக புகார் தெரிவித்ததின் பேரில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி கிராம மக்களுக்கு பாதுகாப் பாக இருக்க ஆடியோ வெளியிட்டார். அதில் இளைஞர்கள் முன் வந்தால் இரவு நேரங்களில் போலீசாருடன் பாது காப்பு பணியில் ஈடுபடலாம் என தெரி வித்ததின் அடிப்படையில் இளைஞர் கள் போலீசார் உடன் இணைந்து பாது காப்பு பணியில் ஈடுபட முன் வந்தனர். இந்நிலையில் காவலர்களுக்கு உதவி யாக கிராமப்புற இளைஞர்கள் இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடுவது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பி யுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குமாரபாளையம் நகரப் பகுதி முன்பை காட்டிலும் தற்போது மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்துள்ளது. வணிக நிறுவனங்க ளும், கடைவீதிகளும், மாலை நேர கடை கள், குடியிருப்புகள் எனவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குமாரபாளையம் நகரம் அபரீதமான வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது. ஆனால் குமார பாளையத்தில் உள்ள காவல் நிலையத் தில் மிக குறைவான போலீசாரே பணியில் உள்ளனர். இதன் காரண மாக குற்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுதும் மற்ற இதர பணிகளிலும் போலீசார் பற்றாக்குறை தொடர்ந்து ஏற் பட்டு வருகிறது. அதிலும் நீதிமன்ற பணி, அரசியல்வாதிகளுக்கான பந்தோ பஸ்து பணி, அரசு சார் நிகழ்வுக்கான பணி என பல்வேறு பணிகளுக்கு காவல் நிலையத்தில் உள்ள சொற்பமான காவ லர்களும் சென்று விடுவதால் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரை சந்தித்து எந்த புகாரை தெரிவிப் பது என்று குழம்பிப் போகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் காவலர் பணியி டங்களை நிரப்ப வேண்டும், என்றனர்.</p>
