முந்தய பக்கம்

இரும்பு கம்பி வேலி அமைக்க கோரிக்கை

23 Dec 2025, 4:05 pm
இரும்பு கம்பி வேலி அமைக்க கோரிக்கை
<p><strong>இரும்பு கம்பி வேலி அமைக்க கோரிக்கை&nbsp;&nbsp;காவிரி ஆற்றில்&nbsp; தொடரும் தற்கொலைகள்</strong></p> <p>நாமக்கல், டிச.23- காவிரி ஆற்றில் தொடரும் தற் கொலை சம்பவங்களை தடுக்க இரும்பு கம்பி வேலி அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் - ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பள்ளிபா ளையத்தில் காவிரி ஆற்றில் பழைய, புது பாலம் என இரண்டு பாலங்க ளிலும் தினந்தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின் றன. இந்நிலையில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குடும்ப பிரச்சனை, தனிநபர் சார்ந்த பிரச்சனைகள் உள் ளிட்ட பல்வேறு காரணிகளால் மாதத் திற்கு ஒரு நபராவது தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறு கின்றன. &nbsp;இந்நிலையில், காவிரி ஆற்றின் பள்ளிபாளையம் புதுப்பாலம் பகுதி யில் செவ்வாயன்று காலை 60 வயது முதியவர் ஒருவர் குதித்து தற்கொ லைக்கு செய்து கொண்டனர். அவ் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை பார்த்து, வெப்படை தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை யினர் பரிசல் மூலம் ஆற்றில் குதித்த முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட னர். மூன்று மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது உடல் கிடைக்காத நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய் யப்பட்டு மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் என தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த முதியவர் யார்? அவர் எதற்காக ஆற்றில் குதித்தார்? &nbsp;என இதுவரையிலும் தெரியாத நிலை யில், காவிரியாற்று பாலத்தில் அடிக் கடி இதுபோல தற்கொலை செய்து &nbsp;கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து &nbsp;வருகிறது. இதனால் &nbsp;பாலத்தின் இரு &nbsp;பகுதிகளிலும், உயரமான கம்பி வேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டி கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram