பொன்னிகாட்டுதுறை தடுப்பணையை மேம்படுத்தபட்ட சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை
20 Nov 2025, 3:46 pm
<p><strong>பொன்னிகாட்டுதுறை தடுப்பணையை மேம்படுத்தபட்ட சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, நவ.20- அமராவதி ஆற்றின் குறுக்கே முதல் தடுப் பணையாக இருக்கும் பொன்னிகாட்டுதுறை தடுப்பணையை மேம்படுத்தபட்ட சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண் டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகி றது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா எல்லை பகுதியான பெருமாள் புதூர் கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமராவதி ஆற்றின் குறுக்கே விவசாய பயன்பாட்டிற்கு என பொன்னிகாட்டுதுறை தடுப்பணை உள் ளது. இதன் மூலம் ஆற்றின் இரண்டு கரைக ளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், அருகில் உள்ள கிராமங்களில் நிலத் தடி நீர் மட்டம் உயரவும், ஆழ்குழாய் கிணறு கள் மூலம் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையிலும், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கரைகள் இரண்டு புறங்களிலும் பனைமரம் மற்றும் நாட்டு மரங்கள் உள்ள தால், இந்த தடுப்பணை ஒரு சிறிய அணை போன்ற தோற்றத்தில் இருக்கும். இதேபோல திருமூர்த்தி மலையில் பஞ்ச லிங்க அருவி அமைந்துள்ள இடத்தில் செயற் கையாக ஒரு அருவியை ஏற்படுத்தியதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக ரித்துள்ளது போல், இங்கும் அதிகரிக்க படகு சவாரி மற்றும் சிறிய பூங்கா அமைத்தால் மிக சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். இது குறித்து அருகில் உள்ள கிராம மக் கள் கூறுகையில், அமராவதி ஆற்றின் முதல் தடுப்பணை பொன்னிகாட்டுதுறையில் அமைத்துள்ளது. இந்த அணையில் பல திரைப்படங்களின் படபிடிப்புகள் நடைபெற் றுள்ளன. மேலும், இப்பகுதியின் வழியாக தான் கேரள மாநிலத்தில் இருந்து பழனி மற்றும் ஆனைமலை, திருமூர்த்தி அணைக ளுக்கு செல்கின்றனர். இந்த தடுப்ப ணையை மேம் படுத்தபட்ட சுற்றுலாத் தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்து தர திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>
