முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க சிறப்பு கிராமசபையில் கோரிக்கை
17 Feb 2026, 3:36 pm
<p><strong>முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க சிறப்பு கிராமசபையில் கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், பிப்.17 – திருப்பூர் ஊராட்சி ஒன்றி யம் முதலிபாளையம் சிறப்பு கிராமசபைக் கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. கலைஞரின் கனவு இல் லப் பயனாளிகள் தேர்வு செய்வது தொடர்பாக இக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு முதலி பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவினர் மனுக் கொடுத்தனர். இதில் முதலிபாளையம் கிராம ஊராட்சி புல எண் 393 மற்றும் நல்லூர் கிராம புல எண் 354, 355, 356, 357 ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளில் அபாயகரமான கழிவுகள் கொட் டப்பட்டதால் கடுமையாக மாசுபட்ட நிலை யில் உள்ளது. இதனால் ஊராட்சியின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு அள விற்கு நீர்வளம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரி யம் 2019, 2025 ஆண்டுகளில் மேற்கொண்ட நீர்ப்பரிசோதனை அறிக்கையின் படி, இப்ப குதி நிலத்தடி நீர் விஷத்தன்மை கூறுகள் கொண்டதாகவும், மனிதர்கள் குடிநீர், பயன் பாட்டிற்கு முற்றிலும் தகுதியில்லாமல் உள்ள தாகவும் தெரிவித்தனர். எனவே மேற்கண்ட பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வும், உடனடியாக தூய்மையான குடிநீர் வழங்கவும் கோரிக்கை வைத்தனர். இம்மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியத் திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்தார்.</p>
