தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிதாக வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்யக் கோரிக்கை

27 Dec 2025, 6:08 pm
புதிதாக வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்யக் கோரிக்கை
<p><strong>புதிதாக வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்யக் கோரிக்கை</strong></p> <p>அவிநாசி, டிச.27- புதிதாக 286 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், புதிதாக விண் ணப்பிக்க எந்த வாக்குச்சாவடி மையத் திற்கு செல்ல வேண்டும் என்பதில் &nbsp;உள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்ய &nbsp;வேண்டும் என அவிநாசியில் விடுபட் டுள்ள வாக்காளர்கள் இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவிநாசி வட்டாட்சியர் அலுவல கத்தில் &nbsp;விடுபட்டுள்ள வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து அனைத்துக் கட்சியி னருடன் ஆலோசனைக் கூட்டம் சனி யன்று அவிநாசி வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், அவிநாசி ஒன்றியத்தில் 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாக்காளர்கள் போதிய &nbsp;ஆவணங்கள் இல்லாமல் விடுபட்டுள்ள னர். இவர்களை சேர்ப்பதற்கு &nbsp;உரிய &nbsp;ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவ லர்களும் விடுபட்டுள்ள வாக்காளர்க ளிடம் ஆவணங்களை பெற்றவுடன், மீண்டும் வாக்காளர் பட்டியல் சேர்த்துக் &nbsp;கொள்ளலாம் எனக் கூறினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி &nbsp;பேசுகையில், 18 வயது பூர்த்தி அடைந்த வர்களுக்கு சிறப்பு வாக்காளர் சேர்ப்பு &nbsp;முகாம் நடைபெற்று வருகிறது. இதில் &nbsp;அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி &nbsp;வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் &nbsp;அவிநாசி ஒன்றியத்தில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் குறித்து அனைத்து அரசி யல் கட்சிகளுக்கும் பட்டியல் வழங்க வேண்டும். இந்தப் பட்டியலின் அடிப்ப டையில் அரசியல் கட்சிகளும் முயற்சி &nbsp;மேற்கொண்டு விடுபட்டுள்ள வாக்கா ளர்களை இணைப்பதற்கு உண்டான நட வடிக்கை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தார். &nbsp;மேலும், திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 2536 &nbsp; வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. &nbsp;1200 வாக்காளர்களுக்கு மேல் இருப்ப தாக வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப் பட்டு புதிதாக 286 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு தற்போது 2,822 வாக்குச் சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள் ளன. இதில் கடந்த தேர்தலின் போது வாக்களித்தும் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் சிலர் புதிதாக விண்ணப்பிப்பதற்கு எந்த &nbsp;வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என வும் வலியுறுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.