தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்னை மரங்களை சேதப்படுத்தி வரும்  காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை

17 Jan 2026, 2:42 pm
தென்னை மரங்களை சேதப்படுத்தி வரும்  காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை
<p><strong>தென்னை மரங்களை சேதப்படுத்தி வரும்&nbsp; காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை</strong></p> <p>உடுமலை,ஜன.17- விளைநிலத்தில் இருந்த தென்னை மரங் களை சேதப்படுத்திய முள்ளம் பன்றிகள் மற் றும் காட்டு விலங்குகள் விளைநிலத்திற்கு வராமல் தடுக்கும் வகையில் மலை அடிவா ரப் பகுதியில் இருக்கும் புதர்களை அகற்றி, &nbsp;முழுமையாக சூரிய சக்தி மின் வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை திருமூர்த்தி மலை அடிவாரப் பகுதியான தளி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாலம் சோலை, திருமூர்த்தி நகர் &nbsp;பாலாறு துரைப்பகுதி மற்றும் வல்லக்குண் டாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருக்கும் தென்னை மரக்கன்றுகளை முள்ளம் பன்றி கள் சேதப்படுத்தி வருகிறது. மேலும், விவ சாய விளைநிலங்களில் இருக்கும் பயிர்க ளையும் விவசாய பொருட்களையும் வன &nbsp;விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. &nbsp;இதை கட்டுப்படுத்த சூரிய சக்தி மின் வேலி &nbsp;மற்றும் மலை அடிவாரப்பகுதியில் அகழிகள் &nbsp;அமைக்க &nbsp; வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மலைப்பகு தியில் இருக்கும் காட்டுவிலங்குகள் உணவு &nbsp;மற்றும் குடிநீர் தேவைகளுக்கு என்று மலை &nbsp;அடிவார பகுதிகளுக்கு காட்டு யானைகள், &nbsp;பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வருகை வருவது தொடர் கதையாக உள்ளது. &nbsp;இது விவசாயிகளை கவலையடைய &nbsp;செய்துள்ள நிலையில், தற்போது நூற்றுக் கும் மேற்பட்ட முள்ளம் பன்றிகள் விளைநிலங் களை சேதப்படுத்தி வருகிறது. &nbsp;இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறு கையில், காட்டுப் பகுதியில் &nbsp;உள்ள விலங்கு கள் விளை நிலங்களுக்கு வர தொடங்கியுள் ளன. இதனால் விளைநிலங்களில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் மற்றும் தென்னை மரங் கள் உள்ளிட்ட விளைபயிர்களை கடும் சேதத் திற்கு உள்ளாகின்றன. இது போன்ற நிகழ்வு களை தடுக்கும் வகையில் வனத்துறையினர் &nbsp;மலை அடி வாரத்தில் சூரிய சக்தி மின் வேலி களை அமைக்க வேண்டும். அதே போல் &nbsp;யானைகளை கட்டுப்படுத்த வனத்துறைக்கு உட்பட்ட மலை அடிவார பகுதிகளில் அகழி களை வெட்ட வேண்டும். வன விலங்குகளால் &nbsp;பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு உரிய &nbsp;நேரத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றனர். காட்டில் இருக்கும் அனைத்து விலங்கு களும் விளைநிலங்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. விளைப் பொருட்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வனத்துறை விலங்கு களை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், குடி யிருப்பு பகுதிகளுக்கு காட்டு விலங்குகள் வந் துவிடும். இதனால் பாதிப்பு மிகவும் கடுமை யாக இருக்கும். உடனடியாக வனத்துறை மலை அடிவாரப் பகுதியில் சூரிய மின்வே லிகள் மற்றும் அகழிகளை வெட்ட வேண்டும் &nbsp;என்பதே அனைவரின் கோரிக்கையாக உள் ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.