மதுராந்தகம் பேருந்து நிறுத்தத்தில் சாய்தளம் அமைக்கக் கோரிக்கை
23 Mar 2026, 5:33 pm
<p><strong>மதுராந்தகம் பேருந்து நிறுத்தத்தில் சாய்தளம் அமைக்கக் கோரிக்கை</strong></p>
<p>மதுராந்தகம், மார்ச் 23- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம், சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தம் ஏரிக்கரை யின் மேல் உயரமாக அமைந்துள்ளதால், பயணிகள் ஏறி இறங்கப் படிகள் மட்டுமே உள்ளன. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இந்தப் பகுதியில் உடனடி யாகச் சாய்தளம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த மாதம் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால், மாணவர்கள் மற்றும் பயணிகள் அன்றாடம் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.</p>
