பயிர்களை சேதப்படுத்திய யானையை விரட்டக் கோரிக்கை
28 Nov 2025, 2:28 pm
<p><strong>பயிர்களை சேதப்படுத்திய யானையை விரட்டக் கோரிக்கை</strong></p>
<p>ஈரோடு, நவ.28- பர்கூர் மலைக்கிராமத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சி, கிழக்கு மலை, ஈரட்டி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வனத்தி லிருந்து வெளியேறிய ஆண் யானை, கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்துவதோடு, விவசாயத் தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானை யால் தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேத மடைந்து வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பர்கூர் வனத்துறையினர் யானையை வனத்துக்குள் அண் மையில் விரட்டினர். இருப்பினும் அதேபகுதியில் யானை உலா வருகிறது. யானை நடமாட்டத்தால் தாங்கள் அச்சத் தில் உள்ளதாகவும், ஏராளமான பொருட்கள் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
