புதிய குடியிருப்புகளை உருவாக்க கோரிக்கை
16 Nov 2025, 3:30 pm
<p><strong>புதிய குடியிருப்புகளை உருவாக்க கோரிக்கை</strong></p>
<p>சென்னை மாநகராட்சி 54 வது வட்டம் யானை கவுனி, பள்ளம், உட்வார்ப்பு குடியிருப்பு பகுதி வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தற்போது மக்கள் வசிக்கும் இடத்திலேயே புதிய குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று (நவ.16) மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறைமுகம் பகுதி குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் வெ. தனலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் அருள் குமார், பகுதிச் செயலாளர் ஆர். குமார் பகுதிக்குழு உறுப்பினர்கள் லோ. விக்னேஷ், கே. வீராச்சாமி, வி. செங்கேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
