புதிய ரேசன் கடை கட்டித்தரக் கோரிக்கை
14 Nov 2025, 1:26 pm
<p><strong>புதிய ரேசன் கடை கட்டித்தரக் கோரிக்கை</strong></p>
<p> இராஜபாளையம், நவ.14- விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்கிழக்கு ஒன்றியம் வாகைகுளம்பட்டி கிளையில் சேதமடைந்த ரேசன் கடையை அகற்றி புதிய ரேசன் கடை கட்டித் தர வேண்டும். பெண்கள் கழிப்பறையை சீரமைக்க வேண்டும். வாறுகால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். பரமசிவம் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் அ.குருசாமி உரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
