மத்திகிரி சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரிக்கை
30 Dec 2025, 5:57 pm
<p><strong>மத்திகிரி சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரிக்கை</strong></p>
<p>கிருஷ்ணகிரி, டிச.30 – மத்திகிரி சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரியில் 2009 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை குப்பைகள் பிரிக்கும் கூட மாக மாற்றியும்,வேறு அலு வலமாகவும் பயன்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என 2009 ஆம் ஆண்டு முதல் சிபிஎம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மிடுகரப்பள்ளி மயா னத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலை யாக அமைத்திட வேண்டும், எடையநல்லூர் எடப்பள்ளி அருகில் உள்ள எம்பிளா ஸ்டிக் டாய்ஸ் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவு நீரை ஏரியில் விடு வதை தடுக்கவேண்டும், நீண்ட நாட்களாக திறக்கப் படாமல் உள்ள எடைய நல்லூர் அரசு பள்ளிக் கூடம், கால்நடை மருத்துவ மனையை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் ஓசூர் மாநகரக் குழு, ஒன்றிய குழு சார்பில் மாநகர செய லாளர் எம்.ஜி நாகேஷ்பாபு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பி னர் சந்திரசேகர் முன்னிலை யில் நடைபெற்ற போராட்ட த்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ்ரெட்டி ,மகா லிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் ஆர்.கே.தேவ ராஜ், மாநகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி, எம்.எம்.ராஜு, சீனிவாசன், ரவி, உதயபாரதி, அந்தோணி சாமி சீனிவாசரெட்டி, தன லட்சுமி, வெண்ணிலா கலந்து கொண்டனர். முன்னதாக மத்தி கிரி பேருந்து நிலையத்தி லிருந்து சமுதாயக்கூடம் வரை பேரணி நடை பெற்றது. ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை ஆணையர்,காவல் துறையினர் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை களை நிறை வேற்றுவ தற்கான கடிதத்தை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலி யுறுத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.</p>
