முந்தய பக்கம்

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை  

10 Dec 2025, 4:08 pm
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை  
<p><strong>100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை &nbsp;</strong></p> <p>திருவண்ணாமலை, டிச. 10- &nbsp;திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திண்டிவனம், துரிஞ்சி குப்பம், குன்னத்தூர், செங்குணம் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. &nbsp;அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என, போளூர் ஒன்றியத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. &nbsp;அந்த கோரிக்கைக்கு சரியான பதில் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் &nbsp;மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக &nbsp;அதிகாரிகள், போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேசி, பதிவு செய்யப்பட்ட திண்டிவனம் கிராமத்தில் 121 பேருக்கும், துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் 45 பேருக்கும், குன்னத்தூர் கிராமத்தில் 18 பேருக்கும், &nbsp;செங்குனம் கிராமத்தில் 28 பேருக்கும், வருகிற 11 - 12 - 2025 முதல் தொடர்ந்து 100 நாள் வேலை தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். &nbsp;நிகழ்வின் போது, சிபிஎம் மாவட்ட செயலாளர் &nbsp;ப.செல்வன், போளூர் வட்டார &nbsp;செயலாளர் இரா.இரவிதாசன் , &nbsp;விவசாயிகள் சங்க செயலாளர் அ. உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மோகன், &nbsp;நகர செயலாளர் பரணி மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram