சமையலர் பாப்பாளுக்கு அரசு வீடு வழங்கக் கோரிக்கை
28 Nov 2025, 2:28 pm
<p><strong>சமையலர் பாப்பாளுக்கு அரசு வீடு வழங்கக் கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், நவ.28- தீண்டாமை வழக்கில் வெற்றி பெற்றிருக் கும் சமையலர் பாப்பாளுக்கு அரசு வீடு மற் றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ப.பா.மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரி வித்தார். அவிநாசி திருமலைக்கவுண்டம்பாளை யம் அரசு பள்ளியில் சாதியின் பெயரால் புறக் கணிக்கப்பட்ட சமையலர் பாப்பாள் வன்கொ டுமை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. இதில், சட்டவிரோதமாக கூடுதல் (ஐபிசி147) பிரிவில் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம், சட்டவிரோத மாக தடுத்தல் (ஐபிசி341 ஆர்/டபிள்யூ 32 (விஏ)) பிரிவில் 1 மாதம் சிறை மற்றும் ரூ.5000 அபராதம், வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் படி சட்ட விரோதமாக பணி செய்யும் இடத்தில் இருந்து வெளியேற்றுதல் (எஸ்சி/எஸ்டி பிரிவு 3(1)(இசட்)(ஈ) 2 ஆண்டுகள் சிறை மற் றும் ரூ.5000 அபராதம், வன்கொடுமை தடுப் புச்சட்டம் 3(1) (ZC) பிரிவின் கீழ் 2 ஆண்டு கள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அப ராதம் என தண்டனை வழங்கப்பட்டதில் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பாப்பாள் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறுகை யில், திருப்பூர் மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றம் தொடங் கப்பட்டு 3 ஆண்டுகளில் வன்கொடுமைக்கு எதிராக சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப் பது இதுவே முதல்முறை. இந்த தீர்ப்பு வர வேற்கத்தக்கது. இச்சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத் தில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுவிகப்பட்டவர்களையும் உரிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பாப்பா ளுக்கு அரசு வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறினார். இந்த தீர்ப்பு குறித்து சமையலர் பாப்பாள் கூறுகையில், நான் பணிபுரியும் அரசு உயர் நிலை பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளது. 37 பேர் சத்துணவு சாப்பிடு கின்றனர். திருமலைக் கவுண்டம்பாளையம் ஊருக்குள் 400 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் வழக்கில் தொடர்புடையவர் கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சாதா ரணமாக பழகக் கூடியவர்கள் தான். கடந்த ஏழு ஆண்டுகள் போராட்டம் இனி இன்னொரு வர் இது போன்ற அவமரியாதையாக நடத்தப் பட கூடாது என தான் நீதிமன்றத்தை நாடி னேன். 7 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இத் தனை ஆண்டுகளாக மன வலிமையோடு போராடினோம். தீண்டாமை ஒழிப்பு முன் னணி உள்ளிட்ட 27 அமைப்புகள் உறுதுணை யாக நின்றது. விடுபட்டவர்களும் தகுந்த சட் டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண் டும். தண்டனை பெற்றவர்கள் அதிகபட்ச தண் டனை பெறவும் மேல்முறையீடு செய்ய உள்ள தாக தெரிவித்தார். தீண்டாமை ஒழி\ப்பு முன்னணி சார்பில் ஆர்.பரமசிவம், ச.நந்தகோபால், சண்முகம், வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலா ளர் பாலமுரளி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன், எஸ்.பிரவீன், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் மணிகண்டன், புனிதன் ஆகி யோர் வழக்கை உறுதியோடு நடத்திய பாப்பா ளுக்கும், அரசு வழக்கறிஞர் பாண்டியன் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.</p>
