அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை
20 Nov 2025, 3:46 pm
<p><strong>அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரத்தில், மக்களின் அடிப்படை வசதிகளான பேருந்து நிலையத்தில் குடிநீர், மின் விளக்கு வசதி, மற்றும் கட்டி முடிக்கப்பட்ட எரிமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, செங்கம் நகராட்சி ஆணையரிடம், சிபிஎம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.லட்சுமணன், தாலுகா செயலாளர் பி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சிவாஜி, சிஎம்.பிரகாஷ், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
