கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
11 Feb 2026, 5:52 pm
<p><strong>கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை</strong></p>
<p>திருவாரூர், பிப்.11 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கையை நிறைவேற்றிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் வி.முனியன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.செங்குட்டுவன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செய லாளர் எம்.செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பநாதன் மற்றும் பலர் உரையாற்றினர். மாநில துணைத் தலைவர் குரு.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். 70 வயதில் 10%கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர். மாவட்டப் பொருளா ளர் ஜி.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார். பெரம்பலூர் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் ஆளவந்தார் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர்கள் நீலமேகம் மற்றும் மாணிக்கம் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை தர்ணா போ ராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் இளவரசன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் என்.ராமச்சந்திரன், துணைத் தலைவர்கள், இணைச் செய லாளர்கள் பேசினர்.</p>
