முந்தய பக்கம்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை

5 Mar 2026, 3:59 pm
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை

சேலம், மார்ச் 5- சேலம் பெருமாள் மலை அடிவாரம் மோனாங் கரட்டைப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. மோனாங்கரட்டைப் பகுதியில் வசிக்கும் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசு சார்பில் சமீபத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சுமார் 50 குடும்பத்தினருக்கு பட்டா கிடைக்கவில்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வா கம் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, வியாழனன்று குரங்குச் சாவடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்திருந்த னர். இதையறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், காவல்துறையினரின் கடும் கட்டுப் பாடுகளையும் மீறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நடந்தே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். அங்கு அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram