தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்

2 Apr 2026, 5:30 am
நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்

நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்

காப்பீட்டுத் துறையில் பணியாற்றி உழைக்கும் மக்களின் காப்பாராக விளங்கியவர் தோழர் சிவசங்கரன். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் 1943ஆம் ஆண்டு ஒரு எளிய விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாணவர்களுக்குப் புத்தகப் பாடத்துடன் சமூகப் பார்வையை ஊட்டினார். பல நூல்களையும் வாசிக்கச் செய்தார்.

1966இல் சிவசங்கரன் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி)த்தில் பெரியகுளத்தில் வேலையில் சேர்ந்தார். விரைவிலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க (ஏஐஐஇஏ) உறுப்பினரானார். 1969இல் நெல்லைக்கு மாற்றப்பட்டார். சிவசங்கரன் 1970இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.

இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு காப்பீட்டுத் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியை முடக்கியது. அதை எதிர்த்து சங்கம் மேற்கொண்ட போராட்டங்களில் சிவசங்கரன் முக்கியப் பங்காற்றினார். சங்கப் பணிகளோடு நிறுத்திடாமல் நெல்லை நகரத்திலும், மாவட்ட அளவிலும் இதர நடுத்தர வர்க்க ஊழியர்களையும் திரட்டுவதற்கு சிவசங்கரன் அக்கறையோடு முனைந்தார்.

சிவசங்கரன் சங்கத்தின் மதுரை கோட்ட முன்னனித் தலைவர்களில் ஒருவராக உருவானார். வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், மருந்துளுநர் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு வழிகாட்டும் பணியை திறம்படச் செய்தார். நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு கட்சி அங்கீகாரமாகும் அரசியல் வகுப்புகள் எடுத்தார்.

ஏஐஐஇஏ கோட்டப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற சிவசங்கரன் துறை உறுப்பினர்களிடையே தொழிற்சங்க வர்க்க அரசியலைக் கொண்டு சென்றார். 83 வயது நிரம்பிய தோழர் சிவசங்கரன் இன்னும் கட்சி உறுப்பினராக தன்னை இயன்ற பணியை இயக்கத்திற்காகச் செய்து வருகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.