தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்:  அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்

15 Feb 2026, 3:03 pm
குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்:  அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்
<p><strong>குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்: &nbsp;அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்</strong></p> <p>ராணிப்பேட்டை, பிப். 15- ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளி யில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக் கான மாநில அளவிலான 5-வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (2026 பிப்ரவரி 13) கோலா கலமாகத் தொடங்கின. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி போட்டிகளைத் தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், &ldquo;ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 14 வயதுக் குட்பட்டோருக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்டன. ஆனால், துணை முதலமைச்சரின் பெரும் முயற்சி யால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்போட்டி கள் மாநில அளவில் மிகச் சிறப்பாக நடத்தப் பட்டு வருகின்றன. திராவிட மாடல் அரசின் இத்திட்டங்களால், ராணிப்பேட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி, &nbsp;கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளனர்&rdquo; எனக் குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான போட்டிகளில் மாவட்ட அளவில் முதலி டம் பெறுபவர்களுக்கு ரூ. 3,000 மற்றும் மாநில அளவில் முதலிடம் பெறுபவர்க ளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வரு கிறது. இந்த மாநில அளவிலான போட்டி களில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, பேட்மிண்டன் மற்றும் கபடி உள்ளிட்ட 12 &nbsp;வகையான விளையாட்டுகள் நடைபெறு கின்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்துசுமார் 6,250 மாணவர்கள் மற்றும் 6,250 மாணவிகள் என மொத்தம் 12,500 பேர் &nbsp;பங்கேற்கின்றனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் மோகனா, தமிழ்நாடு ஹாக்கி சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் வினோத் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கிளாடி சுகுணா, சிவராமன், கோமளா மற்றும் உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபால கிருஷ்ணன், ஜெயலட்சுமி, செந்தில்குமார் உள்ளிட்ட கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.