குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காதஆணையருக்கு ஆட்சியர் கண்டிப்பு
1 hour before

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காதஆணையருக்கு ஆட்சியர் கண்டிப்பு

கள்ளக்குறிச்சி, ஆக.25 -கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பங்கேற்கவில்லை.

இதையடுத்து பொதுமக்கள் மனு அளிக்கும் நிகழ்வின்போது, நகராட்சி ஆணையரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்த மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பி கண்டித்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 698 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடித் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.