முந்தய பக்கம்

காவிலிபாளையம் புதூரில் அரச மரம் மறு நடவு

27 Jan 2026, 3:28 pm
காவிலிபாளையம் புதூரில் அரச மரம் மறு நடவு
<p><strong>காவிலிபாளையம் புதூரில் அரச மரம் மறு நடவு</strong></p> <p>திருப்பூர், ஜன. 27 &ndash; திருப்பூரில் 25 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு பறித்துக் கொண்டு வரப்பட்டு காவிலிபாளையம் புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மறுநடவு &nbsp;செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மெஜஸ்டிக் ஏற்றுமதி குழுமத் தலைவர் கந்தசாமி &nbsp;மற்றும் அவரது மகள் மனோன்மணி ஆகியோர் முயற்சியில் &nbsp;அனைப்பாளையம் பகுதியில் இருக்கும் அவர்களது தோட் டத்தில் நன்கு வளர்ந்திருந்த 25 ஆண்டுகளான அரச மரம் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வேரோடு பறிக்கப்பட்டு காவிலிபாளையம் புதூர் தொடக்கப்பள்ளி மைதானத்தில் மறுநடவு செய்தனர். இந்த மரத்தை காவிலிபாளையம் புதூர் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் கழ கத்தினர் பராமரித்துப் பாதுகாத்து வருகின்றனர். இங்கு இந்த &nbsp;மரம் வேர் பரப்பி பசுமையாக இலை துளிர்த்து உயிர் பிடித்து &nbsp;வளர்ந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள் ளது என பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த என்.முத்து சாமி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram