தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநர்கள் உரிமையைப் பறிக்கும் புதிய சட்டத்தைத் திரும்பப் பெறுக!

18 Mar 2026, 3:34 pm
திருநர்கள் உரிமையைப் பறிக்கும் புதிய சட்டத்தைத் திரும்பப் பெறுக!
<p><strong>திருநர்கள் உரிமையைப் பறிக்கும் புதிய சட்டத்தைத் திரும்பப் பெறுக!</strong></p> <p>ஒன்றிய அரசுக்கு &nbsp;தமுஎகச கண்டனம் சென்னை, மார்ச் 18- &ldquo;இந்தியாவின் பன்முகத் தன்மையையும் விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரி மைகளையும் நசுக்கும் வகையில் ஒன்றிய &nbsp;பாஜக அரசு கொண்டு வந்துள்ள &lsquo;திருநர்கள் &nbsp;உரிமை பாதுகாப்புச் சட்டம் 2026&rsquo; கண்டிக்கத் தக்கது&rdquo; என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலா ளர் களப்பிரன் விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம்: சுய அடையாள உரிமைக்கு எதிரான சதி ஒவ்வொரு மனிதனும் தான் யார் என்ப தைத் தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமையை &nbsp;இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ளது. ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின் படி ஒரு திருநர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது மருத்துவக் குழுவிடமோ சான்றி தழ் பெற வேண்டும் என்பது மனித உரிமை &nbsp;மீறலாகும். இது, &ldquo;ஒவ்வொரு நபரும் தனது &nbsp;பாலின அடையாளத்தைத் தாமாகவே தீர்மா னிக்க உரிமை உண்டு&rdquo; என்ற 2014 ஆம் ஆண்டு &lsquo;நல்சா&rsquo; (NALSA) தீர்ப்பிற்கு முற்றிலும் &nbsp;எதிரானது. மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்பது அநீதி பொருளாதாரச் சூழல் காரணமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத பல திருநர்கள் உள்ளனர். &nbsp;அவர்களிடம் உடல் ரீதியான பரிசோதனை சான்றிதழ்களைக் கட்டாயமாகக் கோருவது உளவியல் வன்முறையாகும். இது திருநர் சமூகத்திற்குள் பிளவை உண்டாக்கும் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் பாகு பாட்டைச் சந்திக்கும் இச்சமூகத்தினர், இனி சான்றிதழுக்காக மேலும் சுரண்டலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகும். மாநில உரிமைகள் பாதிப்பு தமிழ்நாட்டில் &lsquo;திருநங்கைகள் நல வாரியம்&rsquo; போன்ற முன்னோடித் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத் திருத்தம், மாநிலங்கள் வழங்கி வரும் கூடுதல் &nbsp;சலுகைகளையும் திட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யும் அபாயம் உள்ளது. திருநர்களைச் சமத்துவக் குடிமக்களாக நடத்தும் ஜனநாயக சட்டங்களை மட்டுமே இயற்ற வேண்டும். திருநர்களின் தன் னாட்சி உரிமையை மதிக்கும் வகையில் இந்த &nbsp;விரோதத் திருத்தங்களை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். அவர்க ளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய &nbsp;வேண்டும் என தமுஎகச வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.