மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்திடுக! அம்பத்தூரில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்திடுக! அம்பத்தூரில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சென்னை, பிப். 18- சிதிலமடைந்த மழைநீர் வடிகால்வாய் களை சீரமைக்கக் கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் அம்பத்தூர் மண்டலம் 7 அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி கூறுகை யில், அம்பத்தூர் மண்டலம், 86ஆவது வார்டுக்குட்பட்ட மண்ணூர்பேட்டை, காமராஜ் நகர் 3ஆவது குறுக்கு தெரு, பெரு மாள் கோயில் தெரு மற்றும் அனந்தையா நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த வடிகால்கள் முற்றிலும் சிதிலமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 21ஆம் தேதி மண்டலத் தலைவர் மற்றும் அதிகாரி களிடம் மனு அளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை யும், பாதுகாப்பையும் கருதி உடனடியாக சிதிலமடைந்த மழைநீர் வடிகால்வாய் களை சீரமைக்க வேண்டும், மேல் மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள கால்வாய்களுக்கு தகுந்த மூடிகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மனுவை பெற்றுக் கொண்ட உதவி செயற்பொறியாளர் சதீஷ் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மாவட்டத் தலைவர் பிரீத்தா, பகுதிச் செயலாளர் மகாலட்சுமி, நிர்வாகி கள் ஜெப சிபி, எஸ்.நர்மதா, மினி, கே.கஸ்தூரி, பி.யு.சுனிதா, எம்.ஜோதிஸ்வரி, எஸ்.லட்சுமி, எம்.ராகினி, ஏ.அனுராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
