முந்தய பக்கம்

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்திடுக

11 Jan 2026, 2:59 pm
மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்திடுக
<p><strong>மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்திடுக</strong></p> <p>உடுமலை, ஜன.11- மழையால் சேதமடைந்த அப் பர் ஆழியாறு &ndash; குருமலை சாலையை சீரமைக்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தி மலைவாழ் மக்கள் &nbsp;வனத்துறை அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். மலைவாழ் மக்களின் அடிப் படை தேவைகளை பூர்த்தி செய்ய &nbsp;மலை அடிவாரம் செல்ல முடியாத &nbsp;நிலையில், சேதமடைந்த சாலை களை சரி செய்ய வேண்டும் என &nbsp;வலியுறுத்தி ஞாயிறன்று மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைமை யில் பொதுமக்கள் உடுமலை வனத் துறை அலுவலகத்தில் காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் &nbsp;கூறுகையில், கோவை மாவட்டம் &nbsp;அப்பர் ஆழியாறு முதல் மாவ டாப்பு, குளிப்பாட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை வழியாக குரு மலை மற்றும் மேல் குருமலை வரை &nbsp;சாலை செல்கிறது. மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்லும் இச்சாலை, கடந்த ஒரு மாதமாக யெய்த மழையினால் சேத மடைந்துள்ளது. இதனால் மலை வாழ் மக்களினுடைய போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வ தற்கோ, ரேசன் பொருட்களை எடுத்து கொண்டு செல்வதற்கோ, &nbsp;மருத்துவமனைக்கு வந்து செல்வ தற்கோ எந்த வழி வகையும் இல்லா மல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருமூர்த்திமலையிலி ருந்து குருமலை மலைவாழ் மக்கள் &nbsp;குடியிருப்புக்கு செல்லும் பாதை யையும் சீரமைக்க வேண்டும் என &nbsp;தொடர்ந்து கடந்த இரண்டு வாரங் களாக வனத்துறை அதிகாரிகளிட மும், தளி பேரூராட்சி நிர்வாகத்திட மும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இத னால் மலைவாழ் மக்கள் சங்கத் தின் தலைமையில் அதிகாரிகளை &nbsp;நேரில் பார்த்து, சாலைகளை உடன டியாக சரி செய்ய வேண்டும் என் பதற்காக வனத்துறை அலுவலகத் தில் காத்திருக்கிறோம், என்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram