அய்யனாபுரம் ஊரணி தெற்கு கரை பாதையை சீர்படுத்தி சாலை அமைத்துத் தருக! மார்க்சிஸ்ட் கட்சியினர்-பொதுமக்கள் போராட்டம்-கைது
20 Feb 2026, 2:39 pm
<p><strong>அய்யனாபுரம் ஊரணி தெற்கு கரை பாதையை சீர்படுத்தி சாலை அமைத்துத் தருக! மார்க்சிஸ்ட் கட்சியினர்-பொதுமக்கள் போராட்டம்-கைது</strong></p>
<p>இராஜபாளையம், பிப்.20- இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் மேல ராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனாபுரம் புல எண் 1071 பகுதியில் ஊரணி தெற்கு கரை உள்ளது . இந்த ஊரணிதெற்கு கரையை சுற்றி பொதுப்பாதை இருந்து வந்தது .பொ துப்பாதையில் சாலை வசதி கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்டங்களாக போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வட்டாட்சியர், பாதை இருந்தால்தானே நடந்து செல்வீர்கள் என்ற கோபத்துடன் பொ துப்பாதையை ஜேசிபி மூலம் இடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்திய போது வட்டாட்சியர் தலைமையில் ஒப்பந்தம் போடப்பட்டது . ஒப்பந்தத்தை இன்று வரை முழுமை யாக அமல்படுத்தாததால் சிபிஎம் -பொது மக்கள் இணைந்துஅய்யனாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வெள்ளிக் கிழமை அன்று காத்திருக்கும் போராட்டத் தை நடத்தினர் . காத்திருக்கும் போராட்டத்திற்கு முறை யாக அனுமதி கேட்டும் கீழ ராஜகுலரா மன் காவல்துறை அனுமதி மறுத்த நிலை யில் மீறி போராட்டம் நடைபெற்றது. போ ராட்டம் ஆரம்பித்த நிலையில் இருந்து காவல் ஆய்வாளர் மற்றும் கீழ இராஜ குலராமன் சார்பு ஆய்வாளர் பிரகாஷ் தலை மையில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தை நடத்த விடாமல் கைது செய்வதிலேயே குறியாக இருந்தனர். சிபிஎம் தலைவர்கள் சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியதை காவல் துறை யினர் செவிமடுக்கவில்லை . இப்போராட் டத்திற்கு சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் சஞ்சீவி நாச்சியார் தலைமை வகித்தார். காவல்துறையினரின் கெடுபிடிகளை கண்டித்தும் முறையாக அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயலாளர் அ. குருசாமி பேசி னார். அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் கஞ்சி காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் காவல்துறையினர் கஞ்சி காய்ச்ச விடாமல் கடுமையாக மிரட்டினர். இறுதியாக மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட போராட் டத்தில் ஈடுபட்ட கட்சியினர் மற்றும் பொது மக்களை காவல்துறையினர் கைது செய்த னர். போராட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியாண்டி,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம்,வி.எஸ்.குரு சாமி, ஜீவானந்தம்,எம்.கே. பழனிச்சாமி, கிளைச் செயலாளர்கள் கருப்பாயி பழ னிச்செல்வம் உட்படஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
