பூட்டிக் கிடக்கும் ஆதிதிராவிடர் நல விடுதியை திறக்க கோரிக்கை!
1 Jun 2026, 11:35 pm
<p><strong>பூட்டிக் கிடக்கும் ஆதிதிராவிடர் நல விடுதியை திறக்க கோரிக்கை!</strong></p><p>- ராமகிருஷ்ணன் - கோவை, ஜூன் 1- கோவை வெள்ளலூரில் பல ஆண்டுகளாக செயல்பாடின்றி பூட்டிக் கிடக் கும் ஆதிதிராவிடர் மாணவர் விடு தியை தரம் உயர்த்தி, மீண்டும் உடனடியாக திறக்க வேண்டும் என சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விடுதி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருணாகரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிய தாகும். கடந்த காலங்களில் சிறப் பாக செயல்பட்ட இவ்விடுதியில், அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 50-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தங்கி பயன டைந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இது மாணவிகள் விடுதியாக மாற்றப் பட்டது. ஆனால், மாற்றப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மாணவி கூட இங்கு சேர்க்கப்படா ததால், விடுதி முழுமையாக முடக்கப்பட்டு பூட்டிக் கிடக்கிறது; பராமரிப்பும் இன்றி வீணாகி வரு கிறது. தற்போது வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வு களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்தின் முன்னணிப் பள்ளி யாக திகழ்கிறது. இதனால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கிப் படிப் பதற்கான தேவை பல மடங்கு அதி கரித்துள்ளது. எனவே, பூட்டிக்கிடக் கும் விடுதியை சிறுசிறு மரமாத்து பணிகள் செய்து மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியு றுத்தியுள்ளனர். இதுகுறித்து சிபிஎம் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் பஞ்சலிங்கம் கூறுகையில், ஏழை மாணவர்க ளின் கல்விக்கு உதவிய விடுதி செயல்பாடின்றி இருப்பது கண்டிக் கத்தக்கது. அரசு உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங் கோவன் கூறுகையில், முன்பு நில விய தரமற்ற உணவு, சுகாதாரமற்ற சூழல் போன்ற குறைபாடுகளை சரிசெய்து விடுதியை மீண்டும் திறக்க வேண்டும், என வலியுறுத் தினார். இக்கோரிக்கைகளை தொகுத்து, வெள்ளலூர் அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் இ.வெ.வீர மணி சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு விரி வான மனு அனுப்பியுள்ளார். மாண வர்களின் கல்வி நலன் கருதி அரசு இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிபிஎம் கிளைச் செயலாளர் ரங்கநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
