தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அம்மா உணவகம் திறக்கப்படுமா?

17 Jun 2026, 12:11 am
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில்  மீண்டும் அம்மா உணவகம் திறக்கப்படுமா?
<p><strong>முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அம்மா உணவகம் திறக்கப்படுமா? </strong></p><p>விழுப்புரம், ஜூன் 16- விழுப்புரம் அருகே உள்ள முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், முன்பு செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இக்கல்லூரி மருத்துவமனைக்கு, விழுப்புரம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக தினந்தோறும் வரு கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கி னாலும், நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் வெளிநோயாளிகள் உணவிற்காக வெளியில் உள்ள தனியார் உண வகங்களையே சார்ந்திருக்க வேண்டி யுள்ளது. அங்கு விலையேற்றம் மற்றும் தரமின்மை ஒருபுறமிருக்க, அப்பகுதி உணவகங்களின் ஆதிக்கம் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். முன்னதாகச் சிறப்பாக இயங்கி வந்த அம்மா உணவகம், நிர்வாகக் குறை பாடுகளால் மூடப்பட்டது. தற்போது அந்த இடத்தில் மனநலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அம்மா உணவகத்தைத் திறக்க வேண்டும் என்று மாணவர்கள், ஒப்பந்தப் பணி யாளர்கள் மற்றும் நோயாளிகளின் உதவி யாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி, முண்டியம்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகத்தை மீண்டும் திறந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து அரசு எடுக்கும் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.