மேற்கு வங்கத்தில் 90 லட்சம் பேரை நீக்கியது பெரும் அநீதி வாக்களிப்பதற்கான உரிமையை மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!
10 Apr 2026, 5:30 am
<p><strong>மேற்கு வங்கத்தில் 90 லட்சம் பேரை நீக்கியது பெரும் அநீதி வாக்களிப்பதற்கான உரிமையை மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!</strong></p><p>புதுதில்லி, ஏப். 9 - மேற்கு வங்கத்தில், மிகப்பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.</p><p>"மக்கள் வாக்களிப்பதற்கான அரசியலமைப்புச் சட்ட உரிமை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
