தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

9 Oct 2026, 2:32 am
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

உடுமலை, அக்.8-பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் மழைநீர் செல்லும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக செயற்பட்டாளர்கள் மற்றும்விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மழைக்காலங்களில் இயற்கையாக மழைநீர் செல்லும் பாதைகளாகவும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்றடையும் வழித்தடங்களாகவும் ஓடைகள் உள்ளன. ஆனால், பல இடங்களில்ஓடைகள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மழைநீர் செல்லும்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும், நீர்நிலைகள் மற்றும் ஓடைகளில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் நீரின் இயற்கையான ஓட்டம் தடைபட்டு, குடியிருப்புகள் மற்றும்சாலைகளில் மழைநீர்தேங்கும் நிலை ஏற்படுவதுடன், நீர்நிலைகளில் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாத சூழலும் உருவாகிறது.

எனவே, கனமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து நீர்நிலைகள் மற்றும் ஓடைகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஓடைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை முழுமையாக அகற்றி, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதேபோல், மழைநீர் வீணாகாமல் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைஏற்படுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக பராமரிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை பெய்த பிறகு அவசர நடவடிக்கை எடுப்பதைவிட, மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதேசிறந்த நிர்வாகம் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடி முக்கியத்துவம்அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.