சுகாதாரச்சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றுக! சிவகங்கை ஆட்சியரகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்
27 Mar 2026, 3:15 pm
<p><strong>சுகாதாரச்சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றுக! சிவகங்கை ஆட்சியரகம் முன்பு கிராமமக்கள் போராட்டம் </strong></p>
<p> சிவகங்கை, மார்ச் 27- காரைக்குடி அருகே உள்ள கோழிப் பண்ணையை அகற்றக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திளத்து வேல்பட்டி கிராமமக்கள் ஆதார், வாக்கா ளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர். கிராமத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோழிப்பண்ணையை அகற்றக் கோரி சமர்ப்பித்த மனுவிற்கு காரைக்குடி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், ஆர்.ஐ, பிடிஒ, விஏஒ மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்மைக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக கோழிப்பண்ணை அருகில் எந்த குடியிருப்பும் இல்லை என்று பதிலளித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் அதிகம் இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதை மறைத்து கோழிப் பண்ணை உரிமையாளருக்கு ஆதரவாக பதிலளித்ததை கண்டித்து கிராம மக்கள் அரசு ஆவணங்களாகிய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை சமர்ப்பிக் கின்றோம் என்று மனுவில் தெரி வித்துள்ளனர்.</p>
