பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க, பின்னலாடை தொழில் துறையினர் ஒன்றிய அமைச்சர்களிடம் கோரிக்கை
13 May 2026, 11:03 pm

பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க, பின்னலாடை தொழில் துறையினர் ஒன்றிய அமைச்சர்களிடம் கோரிக்கை

திருப்பூர், மே 13- பருத்தி இறக்குமதி வரி 11 சத விகிதத்தை நீக்குமாறு பின்ன லாடை தொழில் துறையினர் ஒன் றிய அமைச்சர்களிடம் நேரில் வலியு றுத்தினர்.

ஒன்றிய அரசின் வர்த்தகம் மற் றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச் சர் சிவராஜ் சிங் சௌஹான் மற் றும் ஜவுளித் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் ஆகியோரை, பின்னலா டைத் தொழில் பிரதிநிதிகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன் சில் தலைவர் ஏ.சக்திவேலுடன் தில் லியில் புதனன்று நேரில் சந்தித்த னர்.

அப்போது பருத்தி இறக்கு மதிக்கு தற்போது விதிக்கப்பட் டுள்ள 11 சதவீத சுங்க வரியை நீக்கு மாறு கோரிக்கை மனு அளித்துள்ள னர் தற்போது பருத்தி விலை உயர்வு காரணமாக தொழில் துறை யினர் சந்திக்கும் நெருக்கடிகளை அமைச்சர்களிடம் தொழில் துறை யினர் எடுத்துக் கூறினர்.

மேலும், பருத்தி இறக்குமதி வரியை குறைப் பதன் மூலம், தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் போதுமான அளவில் கிடைக்கும்; மேலும் ஏற்றுமதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற் றும் ஜவுளித் துறை முழுவதும் முத லீடுகள் அதிகரிக்கும் என்று அவர் கள் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டிற்கான ஜவுளித் துறையின் பருத்தி தேவை சுமார் 337 லட்சம் பேல்கள் என மதிப் பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2025–26 பருவத்திற்கான பருத்தி வரத்து 292.15 லட்சம் பேல்கள் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள் ளது.

இதனால் சுமார் 45 லட்சம் பேல்கள் பற்றாக்குறை ஏற்படும்.

இந்த பற்றாக்குறை நூற்பாலை கள் மற்றும் கீழ்நிலை ஜவுளித் துறைகளுக்கு தரமான மூலப்பொ ருள் பற்றாக்குறையையும், உற் பத்திச் செலவு உயர்வையும் ஏற் படுத்தும் என அவர்கள் அமைச் சர்களிடம் சுட்டிக்காட்டினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி யம், சைமா தலைவர் பி.சண்முக சுந்தரம், பொதுச் செயலாளர் ஆர். தாமோதரன், டெக்ஸ்டைல் பிரா சசிங் கிளஸ்டர் டிரஸ்டி கே.மோக னசுந்தரம், சாய ஆலை சங்க இணைச் செயலாளர் கே.சுதாகர், டெக்மா தலைவர் பி.கிருஷ்ணன், டெக்பா தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த், சிம்கா தலைவர் என்.விவேகானந்த் ஆகி யோர் பங்கேற்றனர்.