தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலைகள், நீர்நிலைகள், கிராமப் பெயர்களில் சாதியை நீக்கி, மறு பெயரிட வேண்டும்! அரசுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

29 Sept 2026, 9:43 pm
சாலைகள், நீர்நிலைகள், கிராமப் பெயர்களில் சாதியை நீக்கி, மறு பெயரிட வேண்டும்! அரசுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

சாலைகள், நீர்நிலைகள், கிராமப் பெயர்களில் சாதியை நீக்கி, மறு பெயரிட வேண்டும்! அரசுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

சென்னை, செப். 29 -தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பொது நிறுவனங்களின் பெயர்களில் சாதி இடம்பெறக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. பெயர் மாற்றத்தில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகக் கூறி, இந்த அரசாணைக்குத் தடை கோரி மதுரையைச் சேர்ந்த பரமசிவம் வழக்குத் தொடர்ந்தார்.

அதனை ஏற்று, அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணைக்குப் பின், அரசாணை செல்லும் என இறுதித் தீர்ப்பு வழங்கியது.இந்த இறுதித் தீர்ப்பை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 2025-ஆம் ஆண்டு அரசாணையை உடனடியாக முழுமையாகச் செயல்படுத்த வேண்டும், சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.இந்நிலையில், அரசாணை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பொது நிறுவனங்களின் பெயர்களில் சாதியை நீக்கி மறுபெயரிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் (பொ) இமயம் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் ‘பறைசேரி’ கிராமத்தின் பெயரை ‘வடக்கு அச்சம் தவிழ்த்தான்’ என மாற்றும்நடவடிக்கைக்கு எதிராகவும் பரமசிவம் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவையும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையானது, செப்டம்பர் 23 அன்று தள்ளுபடி செய்த நிலையில், இங்கும் பெயர் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் ஏற்கெனவே அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.