தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

1 Mar 2026, 5:56 pm
சென்னை விரைவு செய்திகள்

அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

சென்னை,மார்ச்.1- அரசாணை 354-ன் கீழ் ஊதிய மறுவரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு 3,000 ரூபாய் படி வழங்குதல் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு மருத்து வர்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக, வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாநிலைப் போரா ட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செயல்படாத பிஎப் கணக்குகளில் உள்ள பணம் இனி  நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும்!

சென்னை,மார்ச்.1- நீண்ட காலமாகச் செயல்பாட்டில் இல்லாத மற்றும் உரிமை கோரப்படாமல் உள்ள பிஎஃப் கணக்குகளில் இருக்கும் சிறு தொகையை, எந்தவித விண்ணப்பமும் இன்றி நேரடியாகச் சந்தாதாரர்களின் வங்கி கணக்கிற்கே வரவு வைக்க அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. ஆயிரம் ரூபாய்க்குக்குறைவாக இருப்பு உள்ளசுமார் 7.16 லட்சம் கணக்குகள் இதற்காக முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன இந்தத் தொகையானது சம்பந்தப்பட்ட சந்தாதாரரின் ஆதாருடன் இணைக்க ப்பட்ட வங்கி கணக்கில் தானாகவே டெபாசிட் செய்யப்படும். இதற்காகப்பயனாளர்கள் எந்த ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்கவோ அல்லது அலுவலகங்களுக்கு நேரில் செல்லவோ வேண்டியதில்லை.

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபீசர் பணி: இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!

சென்னை,மார்ச்.1- முன்னணி தனியார் வங்கியான சவுத் இந்தியன் வங்கி யில் காலியாக உள்ள ஜூனியர் ஆபீசர் மற்றும் பிசினஸ் புரோமோஷன் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.7.56 லட்சம் (மாதம் ரூ.60ஆயிரம்) ஊதியம் வழங்கப்படும் இப்பணிக்கு விண்ணப்பிக்க திங்களன்று (மார்ச்.2) கடைசி நாளாகும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் வங்கி அல்லது நிதி நிறுவனங் களில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.03.2026 தேதியின்படி 30  வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி  பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக் கப்படும். எழுத்துத்தேர்வு இன்றி குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஏது மில்லை என்பதால் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வாயி லாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கச்சத்தீவு புனிதப் பயணத்திற்கு இந்திய கடலோர காவல்படை முழு பாதுகாப்பு

சென்னை, மார்ச்.1- கச்சத்தீவில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களால் பெரிதும் மதிக்கப்படும் இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மொத்தம் 3,741 புனிதப் பயணிகள் பிப். 27 அன்று கச்சத்தீவுக்குப் புறப் பட்டனர். இயந்திர படகுகளில் சென்ற பக்தர்களை, இந்தியக் கடலோரக் காவல்படையினர் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று இலங்கை கடற்படை யிடம் ஒப்படைத்தனர். கச்சத்தீவில் தங்கி வழிபாடுகளை முடித்த பயணிகள், மீண்டும் இந்தியக் கடலோரக் காவல் படையின் வான்வழி மற்றும் கடல்வழி கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பினர். பக்தர்களின் பயணப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடலோரக் காவல்படை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந் தது குறிப்பிடத்தக்கது.

லாரி ஓட்டுநர் ரயில் மோதி பலி

விழுப்புரம், மார்ச்.1- விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் பகுதி யில் ரயில் தண்டவாளத் தைக் கடக்க முயன்ற டிப்பர் லாரி ஓட்டுநர், ரயில் மோதி  உயிரிழந்த சம்பவம் சோக த்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள பகண்டை கிரா மத்தைச் சேர்ந்த சக்திவேல் (48), சனிக்கிழமை தனது  குடும்பத்தினருடன் மேல் மலையனூர் கோவிலுக்குச் சென்றுவிட்டுச் சரக்கு வாக னத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் மூடப்பட்டி ருந்தபோது, வாகனத் திலிருந்து இறங்கிய சக்தி வேல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி உயிரிழந்தார். தகவல றிந்து வந்த விழுப்புரம் ரயில்வே போலீசார், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடிகளை கைது செய்ய  விழுப்புரம் எஸ்பி உத்தரவு

விழுப்புரம்,மார்ச்.1-  தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத் தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக் கப்பட்டது. கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளர், கடந்த கால தேர்தல்களில் பதற்றம் நிலவிய கிராமங்களை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு கூடுதல் போலீசாரைப் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், புதுச்சேரி மாநில எல்லையோரங்களில் தற்காலி கச் சோதனைச் சாவடிகள் அமைத்து மது மற்றும் சாராயக் கடத்தலைத் தடுக்கத் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். குறிப்பாக, ரவுடிசத்தில் ஈடுபடுவோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்டறிந்து உடனடி யாகக் கைது செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

தள்ளுவண்டி கடைகள் அகற்றம் - வாழ்வாதாரம் வேண்டி வியாபாரிகள் மனு

விழுப்புரம்,மார்ச்.1-  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி கடைகளை நடத்தி வந்த சாலையோர வியா பாரிகள், தங்கள் கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நகராட்சி யின் அடையாள அட்டை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சான்றிதழுடன் வியாபாரம் செய்து வரும் தங்களை,  போக்குவரத்து போலீசார் திடீரென பேரிகார்டு அமைத்து அப்புறப்படுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள் ளனர். குறிப்பாக, தங்களை மிரட்டி மாமூல் கேட்கும் ஒரு  கும்பல், பணம் தர மறுத்ததால் போலீசாருடன் இணைந்து பொய் புகார் அளித்து கடைகளை அகற்ற முயற்சிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக வருமானமின்றி தவிப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே கடை நடத்தி வந்த இடத்திலேயே மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.