ஆர்.ஆர்.நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
21 Feb 2026, 3:26 pm
<p><strong>ஆர்.ஆர்.நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்</strong></p>
<p>விருதுநகர், பிப்.21- விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர்- கன்னி சேரி புதூர் செல்லும் சாலை யின் இரு புறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ் சாலை துறையினர் அகற்றி னர். விருதுநகர் அருகே உள் ளது ஆர்.ஆர்.நகர். இங்கி ருந்து கன்னிசேரி புதூர் செல்லும் சாலையின் இரு புறமும் தனியார் கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்தது. இதனால் இப்பகுதி யில் தொடர் விபத்துகள் ஏற் படுவதாக புகார் எழுந்தன. மேலும், பேருந்துகள், லாரி கள் செல்லும் போது கடும் போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதுடன் பலர் பலத்த காயமடைந்து வந்த னர். எனவே, ஆக்கிரமிப்பு களை அகற்றக் கோரி நெடுஞ்சாலை துறையின ருக்கு தொடர்ந்து புகார் மனுக்கள் வந்தன. அதன் பேரில் விருதுநகர் நெடுஞ்சா லைத்துறை கூடுதல் பொறி யாளர் கணேசன் தலைமை யிலான குழுவினர் காவல் துறையினரின் பாதுகாப்பு டன் ஆர்.ஆர்.நகர் முதல் உழ வர் சந்தை வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.</p>
