ஈட்டிவீரம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இந்து முன்னணி இடையூறை மீறி வருவாய் துறை நடவடிக்கை
7 Jan 2026, 4:05 pm

ஈட்டிவீரம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இந்து முன்னணி இடையூறை மீறி வருவாய் துறை நடவடிக்கை

திருப்பூர், ஜன.7 - ஈட்டிவீரம்பாளையத்தில் அரசுக் குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய் துறையினரு டன், இந்து முன்னணியினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து 38 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட் டம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் க.ச. எண் 544 அரசு புறம்போக்கு இடத்தில், 1994 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் 122 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டாவுக்கு உரிய நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி இப்பகுதியில் உள்ள 1.15 ஹெக் டேர் நிலத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் பெருமாநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கு வீடு கட்ட அனு மதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. 2024ஆம் ஆண்டு செப் டம்பர் மாதம் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்த இடம் கோவில் நிலம் என்று கோரி மனு அளித்தனர். இதையறிந்த, ஏற்கனவே 1994ஆம் ஆண்டு நிலப்பட்டா பெற்ற மக்கள் அந்த இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, முறையாக நிலம் அளந்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதற்கிடையே பட்டா வழங்கிய நிலத்தில், எந்த வழிபாட்டு தலமும் இல்லை என அரசாணையில் குறிப்பிட் டிருக்கும் போதும், சிலர் கோவில் கட்டி, சுற்றி கம்பி வேலி அமைத்து ஆங் காங்கே கூடாரங்கள் அமைத்துவிட்ட னர். இது தொடர்பாக சென்னை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்.17 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், மேற்படி நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுப்படி புதனன்று வட் டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது இந்து முன் னணியினர் இடத்தை அளக்க விடாமல் தடுத்துத் தகராறில் ஈடுபட்டனர். எனவே இடையூறு செய்த 38 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண் டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அரசு திட்டமிட்டபடி, அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் முழு மையாக அகற்றப்பட்டன. பின்பு, இந்த இடத்தை அளந்து பட்டா பெற்றத் தகுதி யுள்ள பயனாளிகளுக்கு நிலம் அளந்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி பரப்பும் பொய்யும்; உண்மை நிலையும்

தமிழ்நாட்டில் எதைச் சொன்னால் மக்களை மதவெறி போதைக்கு ஆட்ப டுத்தலாம், அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறலாம் என இந்துத்துவ வெறி யர்கள் துடிதுடித்து வருகின்றனர். ராமரை மட்டும் சொன்னால் போதாது என்று, மண்ணுக்கேற்ப மதவெறியைப் புகுத்த முருகனைக் கையில் எடுத்துள் ளனர். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை, மையமாக வைத்து “தென்ன கத்தின் அயோத்தி” என்று சதிராட்டம் போடுகின்றனர். துரும்பைக் கூட பயன்படுத்திட அவர்கள் தயாராக இருக்கின்றனர். அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையம் கிரா மத்தில் அரசு நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை புதன்கிழமை வரு வாய்த்துறை அகற்றிய விசயத்தை முன்வைத்து வதந்தீயைப் பரப்பி ஆதாயம் தேடப் பார்க்கின்றனர். “திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை தமிழ்நாடு அரசு இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை 300 ஆண்டுகள் பழமையான குமரன் குன்று என்றும் இந்து முன்னணி அமைப்பினர் தெரி வித்து வருகின்றனர். இதைப் பற்றி சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை என்பது முற்றிலும் வேறானதாகும். பச்சைப் பொய் யைத் திரும்பத் திரும்ப சொன்னால் காவி உண்மையாகி விடும் என்று நம்பு கிறார்கள். இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள வலைதள சுவரொட்டியில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்காக 28.06.2024 அன்று இந்த இடம் மாவட்ட ஆட்சியரால் மாற்றம் செய்யப்பட்டது. நில மாற்றம் செய்தபோது அங்கு வழிபாட்டுத் தலங்களோ, புரதானச் சின்னங்களோ இல்லை. கடந்த 2024 ஜூன் மாதம் சிலர் எவ்வித முன் அனுமதியுமின்றி அந்த இடத்தில் முருகன் சிலை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு செய்தனர். அங்கு குமரன் குன்று என்ற கோவில் உள்ளதாகவும், அதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று அவிநாசி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகை உள்ளிட்ட கட்டுமானம் அகற்றப்பட்டதை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர் என்றும் தமிழ்நாடு தகவல் சரி பார்ப்பகம் தெரி வித்துள்ளது.

நீண்ட கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த பலன்

ஈட்டிவீரம்பாளையத்தில் பட்டா வழங்கப்பட்டும், நிலம் அளந்து தரப்படா மல் பல ஆண்டுகள் ஏமாற்றத்தில் இருந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அணுகி இது குறித்து முறையிட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பட்டா பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை மக்களுக்கு நிலத்தை அளந்து தரக்கோரி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பெருமாநல்லூரில் இருந்து நடைபயணம், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டம் என அடுத்தடுத்து தொடர் போராட்டங் கள் நடத்தப்பட்டன. இந்த களப் போராட்டத்துடன், நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை அளந்து தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து குடியேறும் போராட்டம் நடத் தப்பட்டது. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்து கால அவகாசம் கேட்டு நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து விடுவது வாடிக்கையாக இருந்தது. எனினும் விடாப்பிடியான போராட்டம் நடத்தப்பட் டது. நீதிமன்ற உத்தரவை அமலாக்குமாறு, கடைசியாக காத்திருப்புப் போராட் டம் நடத்தியபோது, அதிகாரிகள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்தான் தற்போது வருவாய்த் துறையி னர் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். அதேசமயம், இந்த இடம் நியூ திருப்பூரின் பின்புறம் இருப்பதால், அங்குள்ள நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது அரசு இலங்கைத் தமிழர் குடியிருப்போ அல்லது பட்டியலின மக்கள் குடிபெயர்ந்தால் நிலத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது என கருதி, ரியல் எஸ்டேட் கும்பல், இதை மதப் பிரச்சனையாக மாற்ற திட்டமிட்டு அங்கு கோவில் கட்ட வைத்துள்ள னர். இதை பயன்படுத்தி இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆதிக்க சக்திகள் தங்கள் அரசியலுக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்கின்றனர் என அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.