தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆவேச முழக்கம்

2 Oct 2026, 1:17 am
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆவேச முழக்கம்

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆவேச முழக்கம்

தருமபுரி, அக்.1-தேர்தல் நடைமுறைகளை சீர்குலைத்ததாகக்கூறி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய

வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வியாழனன்று இடதுசாரிக் கட்சிகள்சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச்சுணன், வே.விஸ்வநாதன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர்கள் சிற்றரசு, சிவன், புள்ளாரு, சிபிஐ (எம்எல்) விடுதலை மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன், மாவட்ட நிர்வாகி ராமதிலகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தோழர் கே.ராஜேந்திரன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ரகுநாதன், கிளைச் செயலாளர் பெனடிக்ட் ஆகியோர் கட்டணவுரையாற்றினர் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் நிறைவுரையாற்றினார். சிபிஎம் நிர்வாகி ராஜரத்தினம் நன்றி கூறினார். இதேபோன்று, பந்தலூர் பஜார் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், வர்கீஸ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் பெரியார் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஐ மாவட்டச் செயலாளர் க.அன்புமணி, மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், சிவகுமார், சிபிஐ (எம்எல்) விடுதலை நிர்வாகிகள் பெரோஷ் பாபு, கோவிந்தராஜ், வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுச்சாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ், எம்.ஆர்.முருகேசன். நாமக்கல் பிரதேசக்குழு செயலாளர் கு.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் கோட்டை பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், சிபிஐ (எம்எல்) விடுதலை மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சந்திரமோகன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எ.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஆர்.முத்தரசன், தேசிய செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

கோவை

கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுரேஷ், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, சிபிஐ (எம்எல்) விடுதலை மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மணிகண்டன் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.