மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
14 Mar 2026, 2:57 pm
<p><strong>மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 14- தருமபுரியில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். மனித நேய மக்கள் கட்சி மற்றும் சமூக நல்லிணக்க மேடை சார்பில், மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி தருமபுரி வணிகர் மஹாலில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.நியாஸ் வரவேற்றார். முஸ்லிம் முன் னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் டி.பி.பைரோஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் எம்.இதயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப் பன், மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பெ.சுப்பிரமணி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜி.இராமதாஸ், சிபிஐ மாவட் டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், விசிக மாநிலச் செய லாளர் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டி யன், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் ஏ. அல்தாப் அஹ்மத், தலைமை பிரதிநிதி ஒய்.சாதிக் பாஷா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஏ.சீராஜுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
