மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்
30 May 2026, 11:47 pm
<p><strong>மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்</strong></p><p>கோபி, மே 30- கோபிசெட்டிபாளையம் அருகே மின்னல் தாக்கி உயிரி ழந்த தம்பதியின் குடும்பத்திற்கு நிவாரண காசோலையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரில், கடந்த சில தினங்களுக்கு முன் மின்னல் தாக்கி சுரேஷ் - மஞ்சுளா தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், சனியன்று உயிரிழந்த வர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவர்களது குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சத்திற்கான நிவாரண காசோலையை குடும்பத்தாரிடம் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி னார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இயற்கை பேரிடர் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வருவாய்த் துறையை பொறுத்தவரையில் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம், என்றார்.</p>
