பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண நிதி
5 Feb 2026, 3:40 pm
<p><strong>பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண நிதி</strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப்.5- கிருஷ்ணகிரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 4,126 மா விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான நிவாரணத் தொகையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கர பாணி வியாழனன்று துவக்கி வைத்தார். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் பி.கே. பெரிய முனுசாமி கவுண்டர் பெயரில் அமைக்கப்பட்ட சாலைப் பெயர் பலகையையும் அமைச்சர் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இருந்தனர்.</p>
<p> </p>
