தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்குக!

18 Jun 2026, 10:18 pm
வேலை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்குக!

வேலை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்குக!

தமிழக அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை!

ரிக்கை! தஞ்சாவூர், ஜூன் 18- மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் நடப்பு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, வேலை இழந்து தவிக்கும் காவிரி டெல்டா மாவ ட்டங்களின் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்குத் தலா ரூ.10,000 நிவா ரணமும், மளிகை மற்றும் காய்கறித் தொகுப்பும் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா. சின்னதுரை தலைமை யில் நடைபெற்ற காவிரி பாசன மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்க இயலாத வாறு மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டிய தண்ணீரைத் திறக்க மறுப்பதோடு, மேகதாட்டுவில் புதிய அணை கட்டப் போவதாகவும் மிரட்டி வருகிறது. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது குறித்து ஒன்றிய மோடி அரசும், நீர் பாசன அமைச்சகமும் சிறிதும் அக்கறை காட்டாமல் இருப்பது கவலையளிக் கிறது என அத்தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.

குறுவை தொகுப்பும் ஏமாற்றமும்

குறுவை சாகுபடிக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நல்ல தொடக்கமாகும். கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை வரவேற்கும் அதே வேளையில், 5 ஏக்கருக்குட்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேநேரம், குறுவை சாகுபடி இல்லாததால் கடுமையான வருவாய் இழப்பைச் சந்திக்கும் விவசாய தொழி லாளர்களுக்கு இந்த குறுவை தொகுப்பில் எதுவும் அறிவிக்கப் படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என தீர்மானம் குறிப்பிடுகிறது. வாழ்வாதாரமின்றி உழைப்பாளி மக்கள் கல்வி, மருத்துவச் செலவு களுக்கு வழியின்றி தவிக்கின்றனர். கடன் சுமையால் பலர் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் எனும் கவலை தோய்ந்த அவலத்தையும் சங்கம் பதிவு செய்துள்ளது.

முக்கிய கோரிக்கைகள்

எனவே, விவசாய தொழிலாளர் களின் துயர் துடைக்கத் தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

• வேலை மற்றும் வருவாய் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

• கூட்டுறவு வங்கி சுய உதவிக் குழுக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் நுண்நிதி நிறுவனங்களின் கடன் தவணை களை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்.

• ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை மற்றும் காய்கறி தொகுப்பை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும். இக்கூட்டத்தில் அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ. லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், பொருளாளர் அ. பழனிச்சாமி, வி. மாரியப்பன், ஜி. ஸ்டாலின், தஞ்சை மாவட்ட தலைவர் பிரதீப் ராஜ்குமார், செயலாளர் ஆர். வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.