திருமேனிக்குப்பம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள்
6 Feb 2026, 5:17 pm
<p><strong>திருமேனிக்குப்பம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள்</strong></p>
<p>திருவள்ளூர், பிப்.6- கடம்பத்தூர் ஒன்றியம் திருமேனிக்குப்பம் கிராமத்தில் பிப் 3 அன்று மின் கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து தரை மட்டமாகின. இதில் தங்க ளின் பழங்குடியினர் சான்றி தழ்கள், ஆவணங்கள் மற்றும் உடமைகளை இழந்த சரவணன், பிரசாந்த், சூர்யா, சந்திரன், வேலு மற்றும் ராஜேஷ் ஆகி யோரின் குடும்பங்களுக்குப் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. கும்மிடிப்பூண்டி எஸ்டு எஸ் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் அறங்காவலர் ஜெய நாராயணா நிவா ரணப் பணிகளை ஒருங்கி ணைத்தார். கும்மிடிப்பூண்டி ‘நண்பர்கள் இலக்கிய வட்டத்தினர்’ ரூ. 11,000 ரொக்கமாகவும், ரோட்டரி சங்கம் சார்பில் 125 போர்வைகளும் வழங்கப் பட்டன. சென்னை ‘எய்டு இந்தியா’ அமைப்பினர் வீட்டு உபயோகப் பொருட் களை வழங்கினர். பாதிக்கப் பட்ட மக்களுக்கு மீண்டும் வீடுகளைக் கட்டித் தரும் பணிகளை மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். தமிழரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>
